உள்ளூர் செய்திகள்

கடலில் மூழ்கி மாணவர் மாயம்

Published On 2023-01-23 14:57 IST   |   Update On 2023-01-23 14:57:00 IST
  • கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
  • கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).

இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.

இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்

Tags:    

Similar News