உள்ளூர் செய்திகள்

தினேஷ்.

கொள்ளிடம் ஆற்று மதகு பகுதியில் சிக்கியவரை தேடும் பணி தீவிரம்

Published On 2022-12-30 13:01 IST   |   Update On 2022-12-30 13:01:00 IST
  • ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் இன்னும் 10 நாளில் வெளிநாடு செல்ல இருந்தார்.
  • பல மணி நேரம் தேடியும் தினேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் இன்னும் 10 நாளில் வெளிநாடு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை தன் வீட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு கொள்ளிட ஆற்றுக்கு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை அறிந்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்ற போது மதகு பகுதியில் சிக்கிக் கொண்டு விட்டார்.

தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கொள்ளிட ஆற்றில் மாலை வரை தேடினர். பல மணி நேரம் தேடியும் தினேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.

மீண்டும் இன்று தேடுதல் பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News