உள்ளூர் செய்திகள்

வெள்ளையாற்றில் உள்ள மணல் திட்டுகள்.

வெள்ளையாற்றின் மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்

Published On 2023-08-23 09:58 GMT   |   Update On 2023-08-23 09:58 GMT
  • மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
  • வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து செருதூர் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் சுமார் 1100 மீனவ குடும்பங்கள், வசித்து வருகின்றனர்.

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

படகுகள் செல்ல முடியாதபடி மணல் திட்டுகள் தேங்கி உள்ளதோடு படகு ஒன்றுடன் ஒன்று மோதியும் படகின் அடிப்பகுதி மணலில், தரைத்தட்டி விபத்து ஏற்படுகிறது பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு சேதம் அடைவதுடன் சில சமயங்களில் மீனவர்கள் உயிரிழக்க நேரிடுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே செருதூர் கிராம வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை நேரில் ஆய்வு செய்து வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை அகற்றியும் தூண்டில் வளைவு அமைத்து செருதூர் மற்றும் வேளாங்கண்ணி மீனவகிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News