உள்ளூர் செய்திகள்
மணல்ேமட்டில் கூரை வீடு எரிந்து நாசம்
- சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்
- வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்.
இவருடைய மனைவி சுபா (வயது 34).
பாஸ்கர் கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்.
அன்று இரவு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் சுபாவின் வீடு எரிந்துகொண்டு இருப்பதாக செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சுபா தனது சகோதரருடன் மன்னிப்பள்ளம் சென்று பார்த்தபோது தனது வீடு முற்றிலும் எரிந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ எவ்வாறு பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.