உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ேஜாடி.
திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர்..
- காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
விழுப்புரம்:
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது. 21). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் அசன் (22) என்பவரும் ேவலை பார்த்து வருகிறார். அப்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதலர்கள் கோவளத்தில் உள்ள தர்காவில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.