உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் உலாவரும் செம்போத்து பறவை.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த செம்போத்து பறவை

Published On 2023-10-18 11:02 IST   |   Update On 2023-10-18 11:02:00 IST
  • கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது.
  • கொடைக்கானலில் செம்போத்து பறவை அதிக அளவு இருப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் இந்த சமயங்களில் அதிகளவில் வருவது வழக்கம். குறிப்பாக சோலைக் காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை வாய்ந்த செம்போத்து பறவை. மிகவும் அரிதாக தென்படும் பறவைகள் என பறவை ஆர்வலர்களால் இது பார்க்கப்படுகிறது.

மனதுக்கு இதமான காடுகளின் நிசப்தத்திற்கு ஏற்றாற் போல கடின ஒலி எழுப்பும் இப்பறவை கொடைக்கானல் வனப்பகுதிகளில் மட்டுமல்லாது பழ மரங்கள் அதிகம் உள்ள தோட்டப் பகுதிகளிலும் தென்படுகிறது. பழங்களை உண்டு விதைகளை காடுகளில் பரப்பும் இந்த பறவையின் தேவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் தோட்டங்களில் அதிகம் பழம் தரும் மரங்களை நட்டு வளர்த்து செம்போத்து பறவையின் வாழ்வியலுக்கு மனிதர்கள் உதவ வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பெரும்பாலும் தரைப்பகுதியில் மட்டுமே இந்தப்பறவைகள் அதிக அளவில் காணப்படும். ஏனெனில் இந்தப்பறவையால் உயரமாக பறக்க முடியாது. ஆனால் தற்போது கொடைக்கானலில் செம்போத்து பறவை அதிக அளவு இருப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News