உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

Published On 2023-07-20 13:46 IST   |   Update On 2023-07-20 13:46:00 IST
  • டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
  • போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மயிலாடு துறையில் உள்ள யூனியன் கிளப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், இதில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

எனவே, வேலை தேடுபவர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சா ன்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடை யலாம். மேலும், இதில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண். 04364-299790-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News