தனியார் நிதி நிறுவனம் ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
- எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல் (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.28,25,000-ஐ தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில், தனியார் நிதி நிறுவனத்தினர், எவ்வித முன் அறிவிப்பும் செய்யா மல், லாரியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற னர். மேலும் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட லாரியை, ரூ.7 லட்சத்து 60 ஆயிரத் துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். தன்னிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து கொண்ட தால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்க ளால் ஏற்பட்ட சிரமங்க ளுக்கு ரூ.5 லட்சம் நிவார ணமும் வழங்க வேண்டும் என்று வழக்கில் தங்கவேல் கேட்டிருந்தார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து வாதங்களை கேட்ட நிலை யில் கடந்த வாரம் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலை யில், நீதிபதி ராமராஜ் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், சட்டவிரோதமாக வாக னத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதும், ரூ.30 லட்சம் மதிப்புடைய அந்த லாரியை ரூ.7,60,000-க்கு, விற்பனை செய்துள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டது.
மேலும் தவறான முறை யில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் இன்சூ ரன்ஸ் புதுப்பிக்கப்படா மலும் வாகனம் பயன்ப டுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்ப டுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு தனியார் நிதி நிறுவ னம் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை, 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று நுகர் வோர் கோர்ட்டு சம்மந்தப் பட்ட நிதி நிறுவ னத்திற்கு உத்தரவிட்டுள்ளது.