உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் பூக்களின் விலை கடும் உயர்வு

Published On 2023-02-05 10:09 GMT   |   Update On 2023-02-05 10:09 GMT
  • 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது.

தஞ்சாவூர்:

தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர் , நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

விசேச தினங்கள், பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் தேவை அதிகரிக்கும் நிலையில் பூக்கள் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம்.

அதிலும் பனிப்பொழிவு, மழை மற்றும் பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் பூக்கள் விலை அதிக அளவு உயரும்.

இந்த நிலையில் இன்று முருகர் சுவாமிக்கு உகந்த தைப்பூச நாள் என்பதால் பூக்களின் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இன்று பூக்களின் விலை கணிசமாக அதிகரித்தது.

அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

இதே போல் முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.400, அரளி ரூ.150, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனையாகியது. இந்த பூக்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.

நாளையில் இருந்து பூக்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News