உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

குஜிலியம்பாறையில் மண் அள்ளச்சென்ற லாரிகளை சிறைபிடித்த மக்கள்

Published On 2023-11-18 13:26 IST   |   Update On 2023-11-18 13:26:00 IST
  • கனரக லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவதால் கிரா மங்களில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.
  • மண் அள்ளுவதற்காக வந்த 2 லாரிகளை தாசமநாயக்கன் பட்டி கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள தாசமநாயக்கன்பட்டி பகுதியில் செம்மண், மண் அள்ளப்படுவது தொடர் கதையாக உள்ளது. கனரக லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவதால் கிரா மங்களில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே மண் அள்ள செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் குழாய்கள் உடைப்பை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் இன்று காலை மண் அள்ளு வதற்காக வந்த 2 லாரிகளை தாசமநாயக்கன்பட்டி கிராம மக்கள் சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், உதவியாளர் மருதமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் இதுபோல் அனுமதியின்றி மண் அள்ளகூடாது என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News