உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு

Published On 2023-07-10 12:48 IST   |   Update On 2023-07-10 12:48:00 IST
  • முதியவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
  • பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்து வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது82). விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சின்னையனின் உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா என்பவரின் விவசாய கிணற்றில் சின்னையன் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று சின்னையனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சின்னையனின் உறவினர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சின்னையனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரித்ததில், சின்னையன் காலை கடன் கழிப்பதற்காக நடந்து வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News