உள்ளூர் செய்திகள்

புதிய பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா- அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2022-12-03 10:07 GMT   |   Update On 2022-12-03 10:07 GMT
  • பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம்.
  • பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பெரியண்ணன் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புதிய பூங்காவினை திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், ஊஞ்சல், சரக்கு ஏற்ற, இறக்க மரம் போன்ற பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

விழாவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்திவாசன், சமீராபர்வீன், பிரேம்நாத் பைரன். பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலெட்சுமி, கோட்டையம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News