கோப்பு படம்.
தேவாரம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை
- இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது.
- சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மக்னா யானை நடமாட்டம் இருப்பது வழக்கமாக உள்ளது. இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் மக்னா யானை தாக்கி இதுவரை ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
எனவே இந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் கடந்த வருடம் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்னா யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி பிடிபடாமல் சென்றது. இந்நிலையில் தற்போது தேவாரம் அருகே உள்ள வட்ட ஓடைப்பகுதியில் மக்னா யானை புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
இதனால் விவசாயிகள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.