உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு உருவான தினமான நவம்பர் 1-ந்தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்- தமிழ் சான்றோர் பேரவையினர் தீர்மானம்

Published On 2023-11-01 08:56 GMT   |   Update On 2023-11-01 08:56 GMT
  • நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும்.

நெல்லை:

ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு உருவான நாளாக கொண் டாடப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லையில் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் தமிழ்நாடு நாள் இன்று வண்ணார்பேட்டையில் கொண் டாடப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், மாணவ- மாணவி களுக்கும், பொது மக்க ளுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப் பட்டது.

நவம்பர் முதல் நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து இதற்காக போராடிய மா.பொ.சி., மார்சல் நேசமணி, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம், விநாயகம், சங்கரலிங்கனார் போன்ற தலைவர்களுக்கு புகழ் மாலை சூடும் நிகழ்ச்சிகளை அரசே நடத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ்ச் சான்றோர் பேரவை மாநகர தலைவர் வக்கீல் சுதர்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜபார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன், மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் ம.தி.மு.க. நட ராஜன், த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜமால், நயினார், சுலைமான், மக்கள் இனப்படு கொ லைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயலாளர் மணி பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இளைஞ ரணி தலைவர் மணிமாறன், பொன்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News