உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரசு பள்ளி கதவு மூடப்பட்டுள்ளதையும், வெளிஆட்கள் உள்ளே வரக்கூடாது என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பையும் படத்தில் காணலாம்.

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த அரசு பள்ளி மைதானம் மூடல்- சமூக ஆர்வலர்கள் வேதனை

Published On 2023-10-28 08:43 GMT   |   Update On 2023-10-28 08:43 GMT
  • பள்ளி மைதானத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.
  • பள்ளி கதவு காலை 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி நூற்றாண்டு கடந்த பாரம்பரிய மிக்க பள்ளி ஆகும்.

இந்த பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தில் பணிக்கு சேர பயிற்சி செய்பவர்கள் இந்த மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இங்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தேர்வுகளில் பங்கேற்றவர்கள் ஏராள மானவர்கள் காவல்துறை மற்றும் ராணு வத்தில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மைதானத்தில் இரவு நேரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி நிர்வாகம் பள்ளி மைதானத்திற்குள் வெளியாட்கள் நுழைய அனுமதி மறுத்து பள்ளி கதவு மூடப்பட்டது. காலை நேரத்திலும் கதவு பூட்டப்பட்டு 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் காலை நேரத்தில் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ளும் வயதான வர்கள், இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் வேதனை அடைந்தனர். மேலும் சாலை பகுதிகளில் நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொண்டால் விபத்து அபாயம் உள்ளதால் பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது மாலை 5 மணிக்கு மேல் மூடப்படுவதில் எந்தவித ஆட்சேபனை யாருக்கும் கிடையாது. ஆனால் அதி காலை நேரத்தில் இத்தனை ஆண்டு காலமாக நடை பயிற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் இரவு நேரங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்க ளை தடுத்து பல ஆண்டு களாக பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி வந்த இந்த மைதானத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News