உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சாணார்பட்டி அருகே 7 வீடுகளில் பணம், நகை, செல்போன்களை திருடிய கும்பல்

Published On 2023-08-09 12:03 IST   |   Update On 2023-08-09 12:03:00 IST
  • குரும்பபட்டி மற்றும் கணவாய்பட்டி பகுதிகளில் இன்று அதிகாலை நகை, செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
  • ஒரே நாளில் 7 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள குரும்பபட்டி மற்றும் கணவாய்பட்டி பகுதிகளில் இன்று அதிகாலை 7 இடங்களில் நகை, செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

குரும்பபட்டியை சேர்ந்த சசிக்குமார் (40) என்பவர் வீட்டில் ரூ.2500 ரொக்கப்பணம், 2 ஜோடி வெள்ளிக்கொலுசு, அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பீரோவை உடைத்து திருடிச் சென்றனர். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் (56) என்பவர் வீட்டில் ரூ.45 ஆயிரம் ரொக்கம், 1 செல்போன் ஆகியவற்றையும், ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40) என்பவர் வீட்டில் ரூ.1000, சதீஸ்குமார் (31) என்பவர் வீட்டில் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

மேலும் ஆண்டவர் என்பவர் வீட்டில் செல்போன், கணவாய்பட்டி பங்களா பகுதியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் ரூ.4 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் சிவக்குமார் என்பவர் வீட்டில் 1 செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த திருட்டுச் சம்பவங்கள் அனைத்தும் அதிகாலை சுமார் 4 மணியளவில் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் உதவியுடனும், கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 7 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News