உள்ளூர் செய்திகள்

நீலகிரி மலை ரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் வீசிய பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த வனத்துறையினா்

Published On 2023-06-21 08:59 GMT   |   Update On 2023-06-21 08:59 GMT
  • பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாக தகவல்கள் வெளியாகின.
  • குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வன பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன.

குன்னூா்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவது வழக்கம். சுற்றுலாப் பயணிகள் மலை ெரயிலில் பயணிக்கும்போது வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருள்களை காட்டு யானைகள் உண்பதாகவும், யானை கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கெளதம் ஆலோசனையின்படி, குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனவா் கோபாலகிருஷ்ணன் வனகாப்பாளா்கள் திலீப், லோகேஷ் விக்ரம் அடங்கிய குழுவினா் ரன்னிமேடு ரெயில் நிலையத்தில் தொடங்கி மலை ரெயில் பாதை வரை கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

ெரயில் பாதையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணிகள் வீசி செல்வதால், ரெயிலில் ஏறும்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயணிகளிடம் இருந்தால் அதனை ரெயில்வே பணியாளா்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும், ரெயில்வே நிா்வாகம் அவ்வப்போது மலை ரெயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக்கை சுத்தம் செய்தால் மட்டுமே வன விலங்குகளை பாதுகாக்க முடியும் என்று வனவிலங்கு ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

Tags:    

Similar News