உள்ளூர் செய்திகள்

சந்திப்பு பஸ் நிலையத்தில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது: சந்திப்பு பஸ் நிலையத்துக்கு மின்சாரம் வழங்க அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-19 14:10 IST   |   Update On 2023-05-19 14:10:00 IST
  • விரைவில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • பஸ் நிலையத்தின் உட்பகுதி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை:

நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

95 சதவீதம் பணிகள்

சுமார் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் அதன் உட்பகுதி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்துக்கு புதிதாக மின்சாரம் வழங்குவது குறித்த ஆய்வு பணிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற் பொறியாளர்கள் தங்கமுருகன், சங்கர், நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை

ஆய்வின் முடிவில் புதைவடம் வழியாக மின்சாரம் வழங்குவதற்கும், பஸ் நிலையத்திற்கு மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்கும் சாதனமான வளைய சுற்று தர அமைப்பு அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News