உள்ளூர் செய்திகள்

மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி : கடலூர் மாவட்டத்தில் முக கவசம் விற்பனை அதிகரிப்பு

Published On 2022-07-04 07:44 GMT   |   Update On 2022-07-04 07:44 GMT
  • மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி கடலூர் மாவட்டத்தில் முக கவசம் விற்பனை அதிகரித்துள்ளது.
  • 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது.

கடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்து வரும் நிலையில், அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதா ரத்துறை வலியுறு த்தியுள்ளது. மேலும் கொரோனா தொ ற்று பரவலை தடுக்க பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபாரா தம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்க வசம் அணிவது அதிகரி த்துள்ளது. தற்போது ஒரு மாஸ்க் 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பலரும் கடை களில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இத னால் முககவசம் விற்பனை சூடுபிடி த்துள்ளது.

Tags:    

Similar News