உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நாளை மறுநாள் தி.மு.க. செயற்குழு ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-09-13 16:13 IST   |   Update On 2023-09-13 16:13:00 IST
  • மாலை 4 மணி அளவில் தருமபுரி வன்னியர் கல்யாண மண்ட பத்தில் நடக்கிறது.
  • 4 ரோட்டில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

தருமபுரி, 

தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தருமபுரியில் நடைபெறு கிறது. இது தொடர்பாக தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

செயற்குழு கூட்டம் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழ ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் தருமபுரி வன்னியர் கல்யாண மண்ட பத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலை வர்கள் செல்வராஜ், மனோ கரன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.

வருகிற 17-ம் தேதி வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழா, வருகிற 26-ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு இளை ஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை மற்றும் கட்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படு வதால் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்கள், கிளை கழக நிர்வாகி கள், அணிகளின் தலை வர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனை வரும் தவறாமல் கலந்துக் கொள்ளு மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 இதேபோன்று தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக சென்று 4 ரோட்டில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இதேபோன்று தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்–படுகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அரூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.

இந்த நிகழ்ச்சிகளிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டு கிறோம். மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட முழுவதும் ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைகள் இல்லாத பகுதிகளில் படங்களுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

Similar News