உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மக்கள் கழகம் கோரிக்கை

Published On 2022-07-25 09:45 GMT   |   Update On 2022-07-25 09:45 GMT
  • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர்.
  • பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிப்பாளையம்:

ஜனநாயக மக்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், நிறுவன தலைவர் ஆத்துார் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர். இதனை தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணத்தை உடனடியாக மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிப்பாளையம் நகர தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News