உள்ளூர் செய்திகள்

சேறும் சகதியுமாக காணப்படும் மண் சாலை.

சேதமடைந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்

Published On 2022-09-30 10:14 GMT   |   Update On 2022-09-30 10:14 GMT
  • மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.
  • பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக வெளியே எடுத்து செல்ல முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்கூர் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரம் மற்றும் மேலத்தெருவு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலை மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.

மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் மழைக்காலங்களில் அச்சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த தெருக்களில் சுமார் 150குடும்பத்தினர்கள் வசித்துவருகின்றனர். ஆனால் அங்கு செல்லும் சாலை இதுவரை மன்சாலையாகவே இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் எருக்கூர் கிராமத்திலிருந்து நெல் மூட்டைகள், பஞ்சு மூட்டைகள் மற்றும் வைக்கோல் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்லும் போது சிரமம் அடைந்து வருகின்றனர்.

மழை பெய்து விட்டால் இந்த சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர காலத்தில் ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்வதில் சிரமம் உள்ளது.

எனவே இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News