உள்ளூர் செய்திகள்

பணிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வருகிறார்: ஓராண்டுக்குள் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவில் மாறும்- அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பேட்டி

Published On 2023-02-06 07:14 GMT   |   Update On 2023-02-06 07:14 GMT
  • திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.
  • மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.

வளர்ச்சி திட்ட பணிகள் ஒவ்வொரு நிலையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக 130 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் கோவிலில் பல இடங்களில் நடந்து வருவதால் இதற்கு மேல் கழிப்பிடங்கள் அமைக்க முடியவில்லை.

மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால், ஓராண்டில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறிவிடும். பணிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News