உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அருகில் கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் மற்றும் பலர் உள்ளனர்.


மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பெண்கள் சுயமரியாதையோடு வாழ முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்

Published On 2023-09-16 13:05 IST   |   Update On 2023-09-16 13:05:00 IST
  • இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
  • இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார்.

தேனி:

தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசிய தாவது,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறு ப்பேற்றவுடன், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையிலும், அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றினை உறுதி செய்யும் வகையில் இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதே போல் அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கருதி இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இல்லாத வகையில், காலையில் மாண வர்கள் உணவரு ந்தாமல் பள்ளி செல்ல கூடாது என்றும் காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படும் சத்து குறை பாட்டினை கருத்தில் கொண்டு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

மேலும், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெ ண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக ரூ.1.6 கோடி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை இன்று தொடங்கி வைத்து மக்களின் முதல்வர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News