உள்ளூர் செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து
- ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், சமபந்தி விருந்து நடைபெற்றது.
- ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர்.
ஓசூர்,
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், சமபந்தி விருந்து நடைபெற்றது.
இதனை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர்.
மேலும் இதில், அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்தி, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.