உள்ளூர் செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-24 12:31 IST   |   Update On 2022-11-24 12:31:00 IST
  • மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
  • மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணுகவும்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதிதொழி ற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தொழிற்க ல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச்சேர்ந்த மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இலவச கல்வித்திட்ட த்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்ப டிப்பு பயிலும் மாணவ- மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க ப்பட்டு வருகின்றது. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் முதுகலை பட்டப்படிப்பு, 3 ஆண்டு பாலி டெக்னிக், தொழிற்க ல்வி போன்ற பிற படிப்புக ளுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்ப ட்டு வருகிறது.

புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 06.12.2022- க்குள் இணைய தளம்மூலம் கோட்புகள் சமர்ப்பிக்க ப்படவேண்டும். புதிய இனங்களுக்கு இணையதளம் 15.12.2022 முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தை அணுகவும். அரசு இணையதளத்தில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளன. மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்க ளில் தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ண ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News