உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

Published On 2023-09-22 09:28 GMT   |   Update On 2023-09-22 09:28 GMT
  • 63-வது வார்டு வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்
  • பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு

கோவை.

கோவை மாநகராட்சி 63-வது வார்டில் நாகப்பன் தேவர் வீதியில் வார்டு சபை கூட்டம் கவுன்சிலர், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனை களான சாலை, குடிநீர், ஆழ்குழாய் கிணறு நீர், தினசரி குப்பைகள் சேகரித்தல் உள்ளிட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் குறைகளை உடன டியாக மத்திய மண்டல உதவ ஆணையாளர்,மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்,சுகாதார மேற்பார்வையாளர்களிடம் எடுத்து கூறி உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தினார்.

மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள குறைதீர் மையத்தை அனுகினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த வார்டு சபை கூட்டத்தில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன்,வெ.நா.உதயகுமார்,வார்டு செயலாளர் சண்முக சுந்தரம்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் அணி கோவை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் உதயகுமார், முன்னாள் வட்ட பொறுப்பாளர் திரு செந்தில் குமார், பூத் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி,வசந்தகுமார், சன் செந்தில், சித்தி விநாயகர் கோயில் அறங்காவல் தலைவர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News