உள்ளூர் செய்திகள்

கலப்பையுடன் மாடுகளை பூட்டி உழவு பணிகளை தொடங்கிய விவசாயிகள்.

பொன்னேர் பூட்டி விவசாயிகள் பூஜை செய்து வழிபாடு

Published On 2022-06-12 10:27 GMT   |   Update On 2022-06-12 10:27 GMT
  • வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.
  • பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது.

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டடை கிராமத்தில் வைகாசி விசாகத்தை ஒட்டி உழவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.

தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் எந்திரமயமாகி விட்டது. இயற்கை வேளாண்மை பாரம்பரிய வேளாண்மை என்பதை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு பொன்னேர் பூட்டும் திருவிழாவை நடத்தியது.வீரமரசம்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு வயலில் வாழையிலையில் படையலிட்டு சூரியனுக்கு வழிபாடு நடத்திய பின்னர். கலப்பையில் மாடுகளை பூட்டி உழவு செய்து உழவு பணிகளை தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News