உள்ளூர் செய்திகள்

அய்யன்குளத்திற்கான விருதை மத்திய மத்திரி ஹர்தீப்சிங், மேயர் சண். ராமநாதனிடம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு தேசிய விருது வழங்கல்

Published On 2023-10-01 10:42 GMT   |   Update On 2023-10-01 10:42 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.
  • கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்ன ர்கள் காலத்தில் உருவாக்க ப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குள த்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீ ர்வழிப்பாதை அமைக்கப்ப ட்டது.

காலப்போக்கில் பராமரி ப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டு உள்ளன.

நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டவிருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்த தற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதில் கலாச்சார பிரிவில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு 3-ம் இடம் கிடைத்தது .

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் , தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதனிடம் வழங்கி பாராட்டினார் . அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News