உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

வடமதுரை அருகே லாரி மீது அரசு பஸ் மோதி பயங்கர விபத்து

Published On 2023-05-28 12:18 IST   |   Update On 2023-05-28 12:18:00 IST
  • வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து கம்பம் நோக்கி அரசு சொகுசு விரைவுபஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலைதடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் (46) என்பவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த சாகுல் ஹமீது (35), மரிய ஜோசப் லியோனி (51), செந்தில்குமார் (46), ராஜா (60), முகமது ஆயில் (14), ஆயிஷா பேகம் (34), முகமது அஜிபுல் (16), சுதாகர் (32), ராஜேஷ் (33), சரவணன் (51), செல்வராஜ் (73) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வாகனங்களை அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News