உள்ளூர் செய்திகள்
தடகளப் போட்டிகளில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை
- 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி குண்டு எறிதல் , தட்டு எறிதலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
- வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட வட்டார வருவாய் அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஜெனிட்டோ ஸ்டேனி குண்டு எறிதல் , தட்டு எறிதலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தையும், 200மீட்டர் ஓட்டத்தில் ஒரு பதக்கத்தையும், தென்காசி மாவட்ட முதல் தடகள போட்டியின் முதன்மை இளையோருக்கான சான்றிதழையும் பெற்றார்.
அதேபோல் பிளஸ்-2 மாணவன் ஸ்ரீராம் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்க பதக்கத்தையும், 7-ம் வகுப்பு மாணவி மகதி இறகு பந்தாட்டத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் பாலமுருகன், பள்ளி முதல்வர் ஏசுபாலன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.
வெற்றி பெற்ற 3 பேரும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.