உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-பழனி நாடார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு

Published On 2023-08-29 08:50 GMT   |   Update On 2023-08-29 08:50 GMT
  • தென்காசி மாவட்டத்தில் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
  • பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது.

தென்காசி:

தென்காசி எம்.எல்.ஏ.பழனி நாடார் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் அதை நம்பி இருந்த ஆறு, குளங்களும் வறண்டு காணப்படுகின்றது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க இரட்டைக்குளம், ஊத்துமலை உள்ளிட்ட ஏனைய கால்வாய்கள் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News