உள்ளூர் செய்திகள்

இறந்த கோவில் காளைக்கு கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நத்தம் அருகே இறந்த கோவில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி

Published On 2023-04-18 11:20 IST   |   Update On 2023-04-18 11:20:00 IST
  • கோவிலின் அருகிலேயே மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் காளையின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிகாசுகளையும், சைக்கிள், சில்வர் போன்ற பல்வேறு பரிசுபொருட்களை வென்றது.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கவராயபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று இருந்தது. காளை வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்து விட்டது. இறந்த கோவில் காளையின் உடல் அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டார கிராம மக்களும் வந்து மரியாதை செலுத்தி சென்றனர்.

இதைதொடர்ந்து கோவிலின் அருகிலேயே மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் காளையின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிகாசுகளையும், சைக்கிள், சில்வர் போன்ற பல்வேறு பரிசுபொரு ட்களை வென்ற கோவில் காளை திடீரென இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Tags:    

Similar News