உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

Published On 2023-05-07 15:25 IST   |   Update On 2023-05-07 15:25:00 IST
  • கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றார்.
  • தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி வாலிபர் உடலை மீட்டனர்.

பூதலூர்:

கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஓரளவுக்கு ஓடிக் கொண்டுள்ளது. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கல்லணைக்கு வந்து பார்வையிட்டனர்.

கல்லணையில் உள்ள மற்ற ஆறுகளில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தை உணராமல் சிறுவர் முதல் பெரியவர் வரை இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் என்கிற பாலகிருஷ்ணன் (வயது 33 ) தனியார் நிறுவன தொழிலாளி. இவர் தனது நண்பர் சிவக்குமார் உடன் கல்லணையை சுற்றி பார்க்க வந்தார். சுற்றிப் பார்த்தவர் சிவகுமாரை மணலில் உட்கார வைத்துவிட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினார். ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கினார். இது குறித்து சிவக்குமார் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை அலுவலர் சகாயராஜ் ,போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடி உயிரற்ற நிலையில் கார்த்தி என்கிற பாலகிருஷ்ணன் உடலை மீட்டனர். இதுகுறித்து தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா பிள்ளை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News