உள்ளூர் செய்திகள்

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

டாஸ்மாக் மதுபானக் கடையை இடம் மாற்றக்கோரி போராட்டம்

Published On 2023-03-07 15:31 IST   |   Update On 2023-03-07 15:31:00 IST
  • கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
  • கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே கல்வ ராயன்மலை கருமந்துறையில் குடியிருப்புகள், அரசு அலு வலகங்கள், வாரச்சந்தை மற்றும் கடைவீதி அமைந்துள்ள பிரதான சாலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால், இப்பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டாததால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து மறியி லில் ஈடுபட்டதோடு, உடனடியாக இடம் மாற்றம் செய்யக்கோரி ஆர்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அன்புசெழியன், டாஸ்மாக் மேலாளர் குப்பு சாமி, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் செய்யப்ப டுமென, அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், 2 மணி நேரம் நீடித்த பொதுமக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஓரிரு மாதங்களில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News