உள்ளூர் செய்திகள்

விழாவில் மாநாட்டு மலரை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட்டார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு தொடக்கம்

Published On 2022-12-18 09:57 GMT   |   Update On 2022-12-18 09:57 GMT
  • அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை.
  • பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை, பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சாா்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு துணைவேந்தர் திருவள்ளு வர் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது, நம்மிடமுள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியம், வரலாறு, பண்பாடு, நாகரீகம் சாா்ந்த பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலை க்கழகத் துணைவேந்தா்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். மேலும், அயலகத் தமிழா்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனா்.

உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை 128 தமிழ்த் தொடா்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் சிலம்பாட்டம், நாட்டியம், நடனம், இசை, தெருக்கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.

கற்றல், கற்பித்தல் திட்டத்தில் நிகழாண்டு முதுநிலைப் பட்டம் வழங்கவுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இப்பணி வருகிற மே மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்த குறுகிய காலப் பயிற்சி திட்டத்தின் கீழ் பாடங்களை எழுதி, மீளாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

புதிய தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி நடைபெறுகிறது. முதுகலைத் தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்க ப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னா், மாநாட்டு மலரை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்பலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பெற்றுக் கொண்டாா்.

பெரியாா் மணி யம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேலுசாமி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவா் (இலங்கை) தவரூபன், நிா்வாக இயக்குநா் (இந்தியா) பொன்னுசாமி, மாநாட்டுத் தலைவா் அப்பாசாமி முருகையன், துணைத் தலைவா் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவா் மங்கையற்கரசி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஸ்ரீவித்யா நன்றி கூறினாா்.

Tags:    

Similar News