உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் 12 ஆண்டாக தாயை இழந்து தவித்த வாலிபர் தற்கொலை

Published On 2022-11-30 14:46 IST   |   Update On 2022-11-30 14:46:00 IST
  • ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார்.
  • நள்ளிரவில் ராஜி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் ராஜி. பூக்கடை பகுதியில் தள்ளுவண்டி வைத்து சிற்றுண்டி கடை நடத்தி வந்தார்.

இவரது தாய் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மீது அதிக அன்பு வைத்திருந்த ராஜியால் இந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போதும் தாயின் நினைவாக இருந்தார். அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார். இதற்கிடையே நள்ளிரவில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு செய்து இருந்தார். அதில் அம்மா... உன்னுடன் இருந்த உறவை மறப்பது கடினம் அம்மா... என்று குறிப்பிட்டு உள்ளார்.

தாய் இறந்த சோகத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12ஆண்டுகள் கழித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News