உள்ளூர் செய்திகள்

கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்தி பெண்ணை கற்பழிக்க முயற்சி- ஜோதிடர் மீது புகார்

Published On 2023-02-14 10:11 IST   |   Update On 2023-02-14 10:11:00 IST
  • பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என ஜோதிடர் கூறினார்.
  • பூஜை என்ற பெயரில் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார் அளித்துள்ளார்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 22). இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது பெற்றோர் இறந்து விட்ட நிலையில் கணவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும்என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தேன். இந்நிலையில் எனது பிரச்சினைகளை தேனியைச் சேர்ந்த கண்மணி என்பவரிடம் கூறினேன். அவர் போடி அருகே பொட்டிப்புரத்தில் உள்ள செல்வராஜ் என்ற ஜோதிடரிடம் என்னை அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கு பூஜை செய்து பரிகாரம் நடத்தினால் கணவருடன் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அதற்காக ரூ.20,000 பணம் வேண்டும் என்றார்.

இதற்கு நானும் சம்மதித்து ரூ.20,000 பணம் கொடுத்தேன். அதன் பிறகு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி என்னை சுவாமி படங்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி மந்திரங்களை சொல்லியபடி என் ஆடைகளை அகற்றச் செய்தார்.

பின்னர் அவரது செல்போனில் என்னை படம் பிடித்தார். அதன் பிறகு என்னை பலாத்காரம் செய்ய முயன்றபோதுதான் தவறான எண்ணத்தில் ஜோதிடர் என்னை நெருங்கியுள்ளார் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூஜை என்ற பெயரில் என்னை பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கொடுத்த ரூ.20,000 ஆயிரம் பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News