உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Published On 2022-12-10 12:59 IST   |   Update On 2022-12-10 12:59:00 IST
  • ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
  • அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருவள்ளூர்:

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு 7 மணியளவில் கனமழை கொட்ட ஆரம்பித்து விடிய விடிய கொட்டி தீர்த்தது.

இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2681 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் 2508 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

நீர்வரத்து 2795 கன அடி‌யாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 554 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தாக 287 கன‌அடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2864 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News