வண்டலூரில் திருட்டுத்தனமாக மது விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது
- இரணியம்மன் கோவில் தெரு அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி இரணியம்மன் கோவில் தெரு அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டலூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (68) என்ற முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.