உள்ளூர் செய்திகள்
வடபழனியில் என்ஜினீயரிடம் செல்போன் பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென சஞ்சை கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
- வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடம்பாக்கம், தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சய். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பணி முடிந்து இன்று அதிகாலை வடபழனி ஆற்காடு சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென சஞ்சை கையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.