உள்ளூர் செய்திகள்

வடமதுரை அருகே தொழிலாளியை அடித்து கொன்ற 4 பேர் கைது

Published On 2023-01-13 10:57 IST   |   Update On 2023-01-13 10:57:00 IST
  • சிகிச்சை பலனின்றி பொன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புதுக்கல ராம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் (வயது25). இவர் அதே பகுதியில் உள்ள நாடகமேடை அருகே தவமணி (24) என்பவருடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தவமணி மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து பொன்னரை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த பொன்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக தவமணி, அவரது உறவினர்கள் சுபாஷ் (வயது27), மகாலட்சுமி (27), பகவதி (19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். உயிரிழந்த பொன்னருக்கு நதியா என்ற மனைவியும், யுவஸ்ரீ என்ற 1½ வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News