உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

Published On 2022-11-12 15:27 IST   |   Update On 2022-11-12 15:48:00 IST
  • மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது.
  • ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ராட்சத மரம் வேருடன் சாய்ந்து முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இந்த மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடந்தன. மேலும் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால் அவதியுற்று வருகின்றனர். சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Similar News