உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே ஆணைவாரி முட்டல் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2023-04-30 10:16 IST   |   Update On 2023-04-30 10:16:00 IST
  • ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது
  • கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இவை வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற வாழப்பாடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரவீன்குமார் (வயது 18) என்பவர் அங்குள்ள நீரோடையில் குளித்தபோது உயிரிழந்தார். இதையடுத்து நீர்வீழ்ச்சி படி, வழிப்பாதை, சாலை பராமரிப்பு பணி ஆகியவைகளை மேற்கொள்வதற்காக ஆணைவாரி நீர்வீழ்ச்சி முட்டல் ஏரியை வனத்துறையினர் மூடினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல், முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில், ஏரியில் படகு சவாரி, பூங்கா திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், ஆணை வாரி நீர்வீழ்ச்சி பகுதியில், தண்ணீர் கொட்டும் இடத்தில் கைப்பிடி அமைத்தல், படிகள் சீரமைப்பு மற்றும் நீரோடை சீரமைப்பு, சாலை மண் அரிப்பு இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முட்டல் ஏரியில் படகு சவாரி, பூங்கா பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர், என்று கூறினர்.

Tags:    

Similar News