உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பெரியஎடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தானம் (வயது 26). இவர் கடந்த 6 மாத காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் இருந்தபோது, அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த அவர், தன் அறைக்குச் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.