உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மளிகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
- கடைக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை கடைக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராஜேந்திரன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.