உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே குட்கா விற்ற வாலிபர் கைது
- திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 250 இருந்தது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு நபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் 250 இருந்தது தெரியவந்தது.
போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய முயன்ற திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவை சேர்ந்த அப்துல் வாகப் (வயது 38) என்பவரை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.