உள்ளூர் செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தக்கோலம் அருகே வசிப்பவர் விஜயகுமார்.
- வீட்டின் மாடியில் துங்கிகொண்டு இருந்தபோது தரைத்தளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகளை திருடி சென்றனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் தக்கோலம் அருகே வசிப்பவர் விஜயகுமார் (வயது 55). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டின் மாடியில் துங்கிகொண்டு இருந்தபோது தரைத்தளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகளை திருடி சென்றனர்.
இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.