உள்ளூர் செய்திகள்
முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் விஜய்வசந்த் எம்.பி. சாமி தரிசனம்
- சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுசீந்திரம்:
உலக பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. இந்த சிவாலய ஓட்டம் குமரி மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் அறங்காவலர்குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் மற்றும் கோவில் ஸ்ரீகாரியங்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.