உள்ளூர் செய்திகள்

தியேட்டர் ஊழியரை தாக்கிய வழக்கில் வாலிபர் கைது

Published On 2023-01-18 17:00 IST   |   Update On 2023-01-18 17:00:00 IST
  • தியேட்டரில் பணியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் அனுமதி இன்றி தின்பண்டங்களை எடுத்துள்ளார்.
  • தட்டிக் கேட்ட நாகேந்திரனை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

திருத்தணி:

திருத்தணி கச்சேரி தெருவில் வசிப்பவர் நாகேந்திரன் (வயது 42). இவர் காந்தி ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் கேண்டீன் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் தியேட்டரில் பணியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் அனுமதி இன்றி தின்பண்டங்களை எடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட நாகேந்திரனை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாகேந்திரன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தணி சட்ட ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, தியேட்டர் ஊழியரை தாக்கிய வழக்கில் காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் அழகன் என்கிற தினேஷை (26) கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News